nn

ஈரோடு மாவட்டம், தாளவாடி, கொங்கள்ளி ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (40). டி.வி.மெக்கானிக். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருடன் கடந்த 17 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும், நந்தினியின் குடும்பத்துக்கு சொந்தமான வீடு ஒன்றில் தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன் கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.

Advertisment

இந்தநிலையில், சீனிவாசன் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவானார். 3 மாதங்கள் கழித்து திரும்பி வந்த அவர், தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும், குழந்தைகளை பார்க்க முடியாத மன வேதனையாலும் சீனிவாசன் விஷச் செடியை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Advertisment

அதுகுறித்து தெரியவந்த அவரது பெற்றோர், அவரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கர்நாடக ம நிலம், சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று மதியம் சீனிவாசன் உயிரிழந்தார்.ன் இதுகுறித்து, தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.