தமிழ்நாட்டின் 2022 - 2023ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு நாளும் சட்டமன்ற நிகழ்வுகளைக் காண்பதற்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இன்று, சட்டமன்ற நிகழ்வுகளைக் குறித்து அறிந்து கொள்ள சென்னை எத்திராஜ் கல்லூரியிலிருந்து பார்வை மாற்றுத்திறன் கொண்ட மாணவிகள் சட்டமன்றத்திற்கு வந்தனர்.