Skip to main content

ஆட்சியர் அலுவலகத்துக்கு மண்ணெண்ணையுடன் வந்த மாற்றுத்திறனாளி.!! பிடுங்கிய காவல்துறையினர்.!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

The disabled person who came to the collector's office with kerosene

 

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், மண்ணெண்ணையையும் எடுத்துவந்தது பரபரப்பை உண்டாக்கியது. திருவாரூர் மருதபட்டினம் பகுதியைச் சேர்ந்த காமாட்சி (32) என்ற மாற்றுத்திறனாளி, வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட செல்வராஜ் (65) என்ற கணவரும், சீதளா தேவி (10), ஐயப்பன் (5) என்கிற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

 

பேருந்து நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வரும் காமாட்சிக்கு கரோனா கெடுபிடியால் வருமானம் இல்லாமல் போக, கடந்த ஆறு மாதமாக வீட்டு வாடகை செலுத்த முடியாமல் தவித்துவருகிறார். வீட்டின் உரிமையாளரோ வீட்டைப் பூட்டிவிட்டு அனைவரையும் வெளியே துரத்தியதால் வேறு வழியின்றி பேருந்து நிலையத்திலேயே தங்கியிருக்கிறார்.

 

வீட்டின் உரிமையாளரோ வாடகை கேட்டு சில நபர்களை அனுப்பி காமாட்சியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் காமாட்சி, தனக்கு தங்குவதற்கு ஒரு இடம் வழங்க வேண்டும் என்று மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவரது கையில் மண்ணெண்ணெய் இருப்பதைக் கண்ட காவல்துறையினர், அதைப் பிடுங்கி அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலரிம் கேட்டபோது, அவருக்கான உதவிகளை உடனடியாக செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.