Skip to main content

தனுஷ் மீது வழக்கு தொடர இயக்குநர் விசு முடிவு

Published on 15/02/2020 | Edited on 15/02/2020
v

 

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘நெற்றிக்கண்’ படம் தொடர்பாக நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடர இயக்குநர் விசு முடிவு செய்துள்ளார்.

 

கே.பாலசந்தரின் கவிதாலயா பட நிறுவனத்தின் தயாரிப்பில், எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 1981ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது நெற்றிக்கண்.   ரஜினிகாந்தின் மருமகனும், நடிகருமான தனுஷ், நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக  தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கான முதற்கட்ட வேலைகளும் தொடங்கியுள்ளதாக  தகவல் வெளியாகி இருக்கிறது.

 

இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்வதற்கு இயக்குநர் விசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அவர் இது குறித்து,  “நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடம் தனுஷ் உரிமம் வாங்குவதை விட கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பதே சரியாக இருக்கும். என்னிடம் உரிமம் பெறாமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்”என்று தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல இயக்குனரும், நடிகருமான விசு காலமானார்

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

சம்சாரம் அது மின்சாரம், மணல்கயிறு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனரும், நடிகருமான விசு. அண்மை காலங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விசு இன்று மாலை 5.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 74.

 

 Vishu, the famous director and actor, has passed away

 

இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இயக்குனர் ஆனவர் நடிகர் விசு. நடிகர் ரஜினிகாந்த் உடன் மன்னன். உழைப்பாளி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

 

Next Story

“அங்கிள்... உங்களை நாங்கள் எந்த இடத்தில் வைத்திருக்கிறோம்...”- வருத்தப்பட்ட தனுஷ்

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்யப்போவதாக வெளியான தகவலை அடுத்து இயக்குனர் விசு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 

dhanush

 

 

அதில், “ரஜினி நடித்த நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக எனக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது. அதில் அந்தப் படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியிருப்பதாகவும் மேனகா நடித்த கதாபாத்திரத்தில் அவரது மகள் கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் எனக்கு வந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார். 

மேலும் அந்த வீடியோவில், தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்றார். இதன்பின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனம், நாங்கள் யாருக்கும் நெற்றிக்கண் படத்தின் ரீமேக் உரிமைத்தை விற்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டது. 

அதனை தொடர்ந்து விசு புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் தனுஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடர்புக்கொண்டது குறித்து தெரிவித்துள்ளார். அதில், “என்னுடைய பேட்டி வெளியான 2 நாட்களுக்குப் பின் தனுஷ், என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். ‘அங்கிள்.. உங்களை எந்த இடத்தில் வைத்திருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியாது. எங்களது இதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். ஏனென்றால் எங்க அப்பா 1982ல் இருந்து உங்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்தார். பல படங்களில் வேலை செய்திருக்கிறார்’ என்று பேசினார்.

பின்பு  ‘அங்கிள்... உங்களுக்கு வந்த செய்தி உண்மையான செய்தி அல்ல. பத்திரிகை நிருபர் ஒருவர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று நினைத்தால், அது எந்தப் படம் என்று கேட்டார். அதற்கு 'நெற்றிக்கண்' என்று பதிலளித்தேன். அது எனக்கு ரொம்பப் பிடித்த படம்’ என்று சொன்னேன். அவ்வளவுதான்.

நான் அந்தப் படத்தின் உரிமையை யாரிடமும் வாங்கவில்லை. யாரிடமும் பேசவும் இல்லை. அதன் முதற்கட்டப் பணிகளையும் தொடங்கவில்லை. வந்தது தவறான தகவல்’ என்று சொன்னார். முன்னதாக கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகாவும் தொலைபேசி வாயிலாக கீர்த்தி சுரேஷை 'நெற்றிக்கண்' ரீமேக்கில் நடிக்க யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்” என்று கூறியிருந்தார்.