தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.விஜய் அஜீத்- ராஜ்கிரண் நடித்த கிரீடம் படத்தின் மூலம் இயக்குநரானார். ஆர்யாவை வைத்து இவர் இயக்கிய மதராசபட்டிணம் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. விக்ரமை வைத்து தாண்டவம், விஜய்யை வைத்து தலைவா, பிரபுதேவாவை வைத்து தேவி படங்களை இயக்கினார்.

al

Advertisment

தலைவா படத்தில் அமலாபால் நடித்தபோது அவருடன் நெருக்கமானது. காதலித்து வந்த இருவரும் 2014ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இருவருக்கும் 2017ம் ஆண்டில் விவாகரத்து ஆனது. இந்நிலையில், நேற்று விஜய் மறுமணம் செய்துகொண்டார்.

Advertisment

சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த ராஜன்பாபு - அனிதா தம்பதியின் மகள் டாக்டர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.