Advertisment

கதைத்திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராக வேண்டும்! - உயர்நீதிமன்றம் உத்தரவு 

'எந்திரன்' கதைத்திருட்டு வழக்கில் இயக்குநர் ஷங்கர் நேரில் ஆஜராக வேண்டுமென இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Advertisment

shankar

1996இல் 'இனிய உதயம்' இதழில் தான் எழுதிய 'ஜூகிபா' என்ற கதை திருடப்பட்டு 'எந்திரன்' திரைப்படம் எடுக்கப்பட்டதாக 2010இல் படம் வெளியானவுடன் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் காப்புரிமை சட்டப்படி 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இயக்குனர் ஷங்கர், கலாநிதி மாறன் மற்றும் சன் பிக்சர்ஸ் மீது வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம், சென்னை உயர்நீதிமன்றம் 27.04.2018க்குள் சாட்சியங்கள் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையை முடிக்கவேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது.

enthiran

Advertisment

அதன்படி இயக்குனர் ஷங்கருக்கு பதிலாக அவரது உதவியாளர் யோகேஷ்சாட்சியளிக்க நீதிமன்றத்தில் முன்வந்தபோது ஆரூர் தமிழ்நாடன் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.கதைத்திருட்டு என்ற புகாருக்கு இயக்குனர் என்ற முறையில் ஷங்கர் மட்டுமே பதிலளிக்க முடியும். அவர் கதையைத் திருடவில்லை என்று மூன்றாம் நபர் சாட்சியளிக்க சட்டத்தில் இடமில்லையென்று வாதிடப்பட்டது.

இன்று 26.7.2018இல் அந்த வழக்கு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் ஆரூர் தமிழ்நாடன் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி இயக்குனர் ஷங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டுமென்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

rajini shankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe