/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SEENU RAMASAMY (1).jpg)
'என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்; முதல்வர் ஐயா உதவ வேண்டும்' என பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னை போரூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இயக்குநர் சீனு ராமசாமி, "நான் விஜய் சேதுபதிக்கு எதிராக இருப்பதாகக் கூறி செய்திகள் சித்தரிக்கப்படுகின்றன. முரளிதரன் படத்தில் நடிக்க வேண்டாமென நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்டுக் கொண்டிருந்தேன். கதை பிடித்ததால் அப்படத்தில் நடிக்க முன் வந்ததாகவும், அதன் பிறகே பின்னணி தெரிந்ததாகவும் விஜய் சேதுபதி கூறினார். எனக்கு அரசியல் சினிமா எடுக்கத் தெரியும்; சினிமாவில் உள்ள அரசியல் தெரியாது. வாட்ஸ் அப் மூலமும், ஃபோன் மூலமும் தொடர்ந்து மிரட்டல் வந்து கொண்டு இருக்கின்றன. சமூக வலைதளத்திலும் தொடர்ந்து ஆபாசமாகத் திட்டுகின்றனர்". இவ்வாறு அவர் கூறினார்.
'தென்மேற்குப் பருவக்காற்று', 'நீர்ப்பறவை', 'தர்மதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us