Advertisment

மார்க்சிஸ்ட் திமுக கூட்டணிக்கு நான் ஆதரவாக வரவில்லை:மதுரையில் சமுத்திரக்கனி பேட்டி

மதுரை பாரளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மதுரை செல்லூர் பகுதியில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்த நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனிசெய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

Advertisment

samuthrakani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

வரும் தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று முதல்தலைமுறை வாக்காளர்களிடம் வேண்டிக்கொள்கிறேன். கட்சிக்குகளுக்கும், கூட்டணிக்கும் அப்பாற்பட்டு நண்பர் என்ற முறையிலே சு.வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன்.

Advertisment

இளையதலைமுறை எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு நிச்சயம் வாக்களிக்க வேண்டும். மதுரையின் புகழை கீழடியை உலகம் முழுவதும், வேள்பாரியை எழுதுவதைப்பற்றி யாரும் நினைத்துகூட பார்க்க முடியாது.

மார்க்சிஸ்ட் திமுக கூட்டணிக்கு நான் ஆதரவாக வரவில்லை. எனது நெருங்கிய நண்பர் என்ற முறையில் வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்.

கீழடி மூடிமறைக்கப்பட வேண்டிய வரலாற்றைஇந்த உலகுக்கு எடுத்துக் கூறியவர். பணத்தை மட்டும் வைத்து வெல்ல முடியாது நேர்மை இருக்க வேண்டும் உண்மை இருக்க வேண்டும் அது வெங்கடேசனுக்கு அதிகம் உண்டு.

கண்டிப்பாக இளம் தலைமுறைகள் இந்த தேர்தலில் பெரும் மாற்றத்தை கொண்டு வருவார்கள் அதற்கு உதாரணம் ஜல்லிக்கட்டு. நான் அரசியலுக்கு வர மாட்டேன். எனக்கு வேற வேலை இருக்கிறது ஆனால் இதுபோன்ற நண்பர்களுக்கு பின்னிருந்து ஆதரவு தருவேன்.

எதிரே இருப்பவர்களை குறைகூற விரும்பவில்லை. நம்ம ஆதரிப்பவர்களை வரவேற்பு போதும் அவர்கள் நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நோட்டுக்குஓட்டு போடுவதனால் எந்த பயனும் இல்லை இது போன்ற நல்ல மனிதர்களை தேடி தேடி ஓட்டு போட்டால் நல்லது என்றார்.

Marxist Party vengadesan madurai actor samuthrakani nadodigal2
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe