Advertisment

“போதையின் தலைநகர் காசி” - இயக்குநர் ராஜூ முருகன்

 Director Raju Murugan Speech in loyola college

Advertisment

போதைக்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடங்கி நடைபெற்றது. இதன் இறுதி விழா நேற்று(16-ந்தேதி) சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அமைச்சர் ம.சுப்பிரமணியன், வி.சி.க. தலைவரும், எம்.பியுமான தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், நக்கீரன் ஆசிரியர், சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திரைப்பட இயக்குநர்கோபி நயினார், மற்றும் ராஜூ முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், “போதையை ஒழிக்கச் சட்டம் போட்டுத்தடுக்கும் கூட்டமும், மற்றொரு பக்கம் திட்டம் போட்டு திருடும் கூட்டமும் இருக்கிறது என்று சொன்னால் இங்கே சட்டம் போடும் கூட்டமும், திருடும் கூட்டமும் ஒன்று தான். மது ஆலைகளை நடத்துபவர்கள், போதை மாஃபியாக்கள் பின்னாடி இருப்பவர்கள் எல்லாம் ஆட்சியாளர்கள் தான். போதை போதை என்கிறார்கள் போதையின் தலைநகரமாக காசி தான் இருக்கிறது. பிரதமருக்கு அது தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe