Skip to main content

30 வயதுக்கு மேல் திருமணம் வேண்டாம் என்பது மோசமான கலாச்சாரம் – இயக்குநர் வாசு பளீச் பேச்சு!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

திருச்சியில் ரோட்டரி கிளப் மாவட்டம் 3000 கவர்னர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மிட் டவுன் ரோட்டரி கிளப் தலைவர் ரமேஷ் வரவேற்றார். ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் இயக்குனர் பாஸ்கர் தலைமை வகித்தார். 

vasu


இந்த நிகழ்ச்சியில் புதிய கவனராக மருத்துவர் ஜமீர்பாஷா பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குனர் வாசு பேசுகையில், 

வாழ்க்கையில் கடனே இல்லாதவன் பணக்காரன், வியாதியே வராதவன் லட்சாதிபதி, கோவப்படாதவன்  கோடிஸ்வரன். இந்த வகையில் ரோட்டரி கவர்னர் ஜமீர்பாஷா யாரிடமும் கோவப்படாத சிறந்த மனிதர். அவரது பணி சிறக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது ஒரு மோசமான கலாச்சாரம் ஊடுருவி வருகிறது. அதை தடுத்துநிறுத்த வேண்டும். 30 வயது கடந்தவர்கள் திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்கள். சரியான வயதில் திருமணம் செய்துகொண்டு தங்களது சந்ததிகளை வளர்காதவர்கள் வயதான காலத்தில் நிச்சயம் கோடீஸ்வரராக இருந்தாலும் ஆதரவு இல்லாமல் கஷ்டப்பட்டாக வேண்டும். எனவே உங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள் என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித பட இயக்குநர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
pa.ranjith movie j.baby director suresh maari emotional at press meet

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய நாளை யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். படம் முடிந்து பலரும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்க அதனால் எமோஷனலான இயக்குநர் சுரேஷ் மாரி கண்ணீர் விட்டு அழுதார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Next Story

திரைப்பட விருதுகள் விழா; தமிழக அரசு அறிவிப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Film Awards Ceremony; Tamil Govt Announcement

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் விழா நாளை நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் திரைப்பட விருதுகளை அமைச்சர் மு.பெ.சுவாமிநாதன் வழங்குகிறார். மொத்தம் 39 விருதாளர்களுக்கு காசோலை, தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட இருக்கின்றன.

2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது இறுதிச்சுற்று படத்திற்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களுக்காக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகையாக ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்பு பரிசு - கௌதம் கார்த்திக் (வை ராஜா வை), சிறந்த நடிகை சிறப்பு பரிசு ரித்திகா சிங் (இறுதிச்சுற்று), சிறந்த வில்லன் அரவிந்த்சாமி (தனி ஒருவன்), சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது - சிங்கம் புலி (அஞ்சுக்கு ஒண்ணு) அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் சுதா கொங்கரா (இறுதிச்சுற்று), சிறந்த கதை ஆசிரியர் மோகன் ராஜாவுக்கு (தனி ஒருவன்), சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்), சிறந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜிக்கும் (தனி ஒருவன்) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.