ADVERTISEMENT

"ராஜராஜ சோழன் உயிரோடு இருந்தால்..." மீண்டும் சர்ச்சையில் பா.ரஞ்சித்!

11:01 AM Jul 26, 2019 | suthakar@nakkh…


சில வாரங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், மன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்காக அவர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சமூக பொறுப்புகளை உணர்ந்து பா.ரஞ்சித் கருத்து தெரிவிக்குமாறு கூறி ஜாமீன் வழங்கியது.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், ராஜராஜ சோழன் குறித்து நான் பேசியதை எந்தவொரு இடத்திலும் மறுக்கவில்லை. ராஜராஜ சோழன் தற்போது உயிருடன் இருந்தால் என் விமர்சனத்தை ஏற்று என்னுடன் விவாதம் செய்ய வந்திருப்பார் என கூறினார்.

மேலும், ஒரு குறிப்பிட்டவர்களிடம் மட்டும் இங்கு எப்படி நிலம் உள்ளது? ஏன் எங்களிடம் நிலம் ஏன் இல்லை? என் பேச்சு பிறரை கோபப்படுத்தி இருந்தால் தவறு எதிர்ப்பவர்களிடம்தான் உள்ளது. என் மீது இல்லை என கூறினார். ஏற்கனவே சர்ச்சையில் சிக்கி தற்போதுதான் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், பா.ரஞ்சித் மீண்டும் இவ்வாறு பேசியுள்ளது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT