Advertisment

வெளியானது ‘அண்ணாத்த’! தனக்கு பிடித்த காட்சியை பகிர்ந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Director Lokesh Kanagaraj shared his expirenece on Annatha Film

நடிகர் ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீடாக இன்று (4ஆம் தேதி) திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் வெளியாகும் முன், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டிரைலர் உள்ளிட்டவைவெளியாகி ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியசமூகவலைதளங்களில் வைரலாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கவைத்தது.

Advertisment

மேலும் இப்படத்தின் 'அண்ணாத்த அண்ணாத்த...' மற்றும் ‘சாரக் காற்றே...’ ஆகிய பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், இன்று அண்ணாத்த படம் வெளியானது. இதன் சிறப்பு காட்சி காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் ஏராளமானோர் இந்த சிறப்பு காட்சியைக் கண்டுகளித்தனர். திரைப்படம் முடிந்து வெளிவந்த ரசிகர்கள், தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். அதேபோல், திரைத்துறையினரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். அதில் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், “படம் சம பிரமாதமா இருக்கிறது. குறிப்பா, முத்து, படைப்பா, அருணாச்சலம் அந்த மீட்டரில் படம் விறுவிறுவென இருக்கிறது. எனக்கு இடைவேளை காட்சி மிகவும் பிடித்திருந்தது” என்று தெரிவித்தார். அண்ணாத்தே படத்தை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Advertisment

annathe lokesh kanagaraj
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe