Advertisment

இயக்குநர் ஜெயபாரதி காலமானார்!

Director Jayabharathi passed away

திரைப்பட இயக்குநரும், பிரபல எழுத்தாளருமாக விளங்கியவர் ஜெயபாரதி (வயது 77). இவர் கடந்த 1979ஆம் ஆண்டு திரள் நிதி (கிரவுட் பண்டிங்) முறையில் ‘குடிசை’ என்ற திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமானவர். திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு பத்திரிகையாளராகப் பணியாற்றியவர் ஆவார். மேலும் நண்பா நண்பா, உச்சி வெயில், ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். இவர் கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு ‘புத்திரன்’ என்ற படத்தை இயக்கினார்.

Advertisment

இப்படத்துக்கு தமிழக அரசின் 3 விருதுகள் கிடைத்தது. குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் தான் இவர் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (06.12.2024) காலை 6 மணியளவில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment
writer director
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe