முதல் அமைச்சருக்கு கோடான கோடி நன்றி..! -பாரதிராஜா அறிக்கை!

''தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்'' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

eps

இதுதொடர்பாக திரைப்பட இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில், தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீளா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டார்.

விலைமதிப்பில்லாத அந்த இசை கலைஞனை அரசு மரியாதையோடு அடக்கம் செய்வது ஒன்று மட்டுமே அவருக்கு தருகின்ற சரியான அங்கீகாரமாக இருக்கும். இதனை உணர்ந்து அதை செயல்படுத்த முன்வந்துள்ள முதல்-அமைச்சருக்கு கலை உலகின் சார்பிலும், இசை ரசிகர்களின் சார்பிலும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமரும், தமிழக முதல்-அமைச்சரும் கலைத்துறையினர் மீது எந்த அளவுக்கு அன்பும், பாசமும் கொண்டிருக்கிறார்கள் என்பதை மொத்த கலை உலகமும் நன்கு அறியும். அதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு தான் தமிழக முதல்-அமைச்சர் இந்த அறிவிப்பு.'' இவ்வாறு கூறியுள்ளார்.

bharathiraja song spb
இதையும் படியுங்கள்
Subscribe