Skip to main content

இயக்குனர் பாலாவுக்கு நேர்ந்த நிலை!

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

நடிகர்கள் விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா ஆகியோர் இன்று முன்னணி நடிகர்களாக இருப்பதற்கு இயக்குனர் பாலா ஒரு முக்கியமான காரணம். பாலா இயக்கிய சேது, நந்தா, பிதாமகன், பரதேசி, நான் கடவுள் ஆகிய படங்கள் மக்கள் மத்தியிலும், சினிமா பார்வையாளர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். இதில் பிதாமகன் படத்திற்காக நடிகர் விக்ரமுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த நிலையில் இவரது படங்களில் நடித்தால் அவர்களுக்கு எதிர்காலம் நன்றாக இருக்கும் என்பதால் ஒரு கட்டத்தில் பாலா படத்தில் நடிப்பதற்காக நடிகர், நடிகைகள் போட்டி போட்டு கால் சீட் கொடுத்தனர். ஆனால் தற்போது அவரது இயக்கத்தில் வந்த படங்கள் எதுவும் சரியாக ஓடாத காரணத்தாலும், முன்பு மாதிரி பாலா படங்கள் தற்போது இல்லை என்பதாலும் அவரது படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் தயக்கம் காட்டுவதாக செய்திகள் வருகின்றன. 
 

bala



இந்த நிலையில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ’அர்ஜுன் ரெட்டி’ படத்தை விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக அறிமுகம் செய்து பாலா ரீமேக் செய்தார். ஆனால், பாலா இயக்கிய அந்தப் படம் தாங்கள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை என்று கூறி, தயாரிப்பு நிறுவனம் முழு படத்தையும் கிடப்பில் போட்டுவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து புதிதாக படத்தை எடுத்தது. இப்படி, ஒரு பிரபல இயக்குனர் இயக்கிய படத்தை தரக்குறைவாக இருப்பதாகச் சொல்லி தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது தமிழ் சினிமா வரலாற்றில் இது முதல் முறை.  

இந்த சம்பவத்தால் பாலா அதிர்ச்சி அடைந்து அறிக்கை விட்டார். அதில் துருவின் எதிர்காலம் கருதி இந்த பிரச்சனையை நான் பெரிதாக்கவில்லை என்று கூறினார். இதனையடுத்து பாலா ஆர்யாவை வைத்து படம் எடுக்க பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் ஆர்யாவும் கால்சீட் இன்னும் தரவில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, இயக்குனர் பாலா தற்போது வரை எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருக்கிறார் என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

கண்ணீர் விட்டு அழுத பா.ரஞ்சித பட இயக்குநர்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
pa.ranjith movie j.baby director suresh maari emotional at press meet

பா. ரஞ்சித்தின் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'J.பேபி'. இப்படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு டோனி பிரிட்டோ என்பவர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் டீசர் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. மேலும் 'நெடுமரம் தொலைந்ததே' என ஒரு பாடலின் லிரிக் வீடியோ அதற்கு முன்னதாக வெளியானது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படம் மார்ச் 8 ஆம் தேதி ஆகிய நாளை யு சான்றிதழுடன் வெளியாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. 

இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். படம் முடிந்து பலரும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்க அதனால் எமோஷனலான இயக்குநர் சுரேஷ் மாரி கண்ணீர் விட்டு அழுதார். பின்பு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.