Skip to main content

’வர்மா படத்திலிருந்து விலகியது நான் மட்டுமே எடுத்த முடிவு! ’-இயக்குநர் பாலா விளக்கம்

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

b

 

வர்மா  படத்திலிருந்து விலகிக்கொள்வது  என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.   படைப்பு சுதந்திரம் கருதி இது நான் மட்டுமே எடுத்த முடிவு.   படத்தில் இருந்து விலகியது குறித்து ஜனவரி 22ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  தயாரிப்பாளர் தெரிவித்த தவறான தகவலால் விளக்கம் அளிக்கம் வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.  மற்றபடி, துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை என்று இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.   

v


இயக்குநர் பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள படம் ‘வர்மா’.  தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் இம்மாதம் திரைக்கு வர இருந்தது.  இந்நிலையில், இப்படத்தை இயக்கிய தயாரிப்பு நிறுவனம்,  கடந்த 7.2.2019 அன்று  வர்மா படம் கைவிடப்படுகிறது.   தெலுங்குப்படமான அர்ஜூன் ரெட்டி போல் வர்மா படம் விறுவிறுப்பாக இல்லாததால் கைவிடப்படுகிறது.  துருவ் விக்ரம் மட்டும் அடுத்த தயாரிப்பில் இருக்கிறார்.  மற்றபடி புதிய இயக்குநரைகொண்டு மீண்டும் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக நிறுவனம் அறிவித்தது.   இதையடுத்து பாலா இன்று மேற்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளார்.


 

b

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சமுத்திரக்கனியால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள்” - பாலா

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
bala speech at Ramam Raghavam Teaser launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானி இப்படத்தை இயக்கி உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில்,  இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது பாலா பேசுகையில், “சமுத்திரக்கனி ரசிகனாக இங்கு வந்திருப்பதில் பெருமையடைகிறேன். நடிப்பிலும் தேசிய விருது வாங்கி, இயக்கத்திலும் நிறைய படங்கள் பண்ணி தன்னை நிரூபித்துக் காட்டிவிட்டார். அதைத் தாண்டி அவருடைய கடுமையான உழைப்புக்கு ரசிகன். ஒரு நாளைக்கு அரை மணிநேரம் கூட வீணடிக்க மாட்டார்.  

அதே போல் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் அவருக்கு இருக்கிற மனசு பெரியது. அதை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர் நடிக்கிற படமாகட்டும் அல்லது அவருக்கு பிடித்த அப்பா மாதிரியான படமாகட்டும் அதை ஊக்குவிப்பதில் அவருக்கு பெரிய மனது இருக்கிறது. இது போன்ற குணம் மட்டும் அவரிடம் தொடர்ந்து இருந்தால் அவரால் இன்னும் ஆயிரம் பேர் பிழைப்பார்கள். அதை அவர் விட்டுவிடக்கூடாது” என்றார். 
 

Next Story

விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
case against vikram regards veera dheera sooran movie poster

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

case against vikram regards veera dheera sooran movie poster

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.