கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்.
கணினி ஆசிரியர் பணிக்கான (முதுகலை ஆசிரியர்) தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். அதன்படி www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். கணினி ஆசிரியர் பணிக்கான (முதுகலை ஆசிரியர்) தேர்வு ஜூன் மாதம் 23, 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.