Advertisment

"சிங்கப்பூர், மலேசியா - தமிழ்நாடு இடையே நேரடி விமான சேவை தேவை" - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

publive-image

Advertisment

சிங்கப்பூர், மலேசியா - தமிழ்நாடு இடையே நேரடி விமான சேவை தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (25/11/2021) மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஒன்றிய அரசின் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுடன் கோவிட் கால விமான போக்குவரத்திற்கான ஒப்பந்தம் செய்துகொள்ளாத நிலையைக் குறிப்பிட்டு, அந்நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வர விரும்பும் நேர்வுகளில், நேரடி விமான சேவை இல்லாத காரணத்தால், துபாய், தோகா, கொழும்பு மார்க்கமாக மாற்றுப் பாதையில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும், அதன் காரணமாக, பல்வேறு இன்னல்களுடன் அதிக விமானக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியுள்ளதையும்சுட்டிக்காட்டி அவர்கள் எதிர்கொள்ளும் இத்தகைய இடர்பாடுகளைத் தீர்ப்பதற்கு தற்காலிக விமான சேவைகளை வழங்கிட ஏதுவாக, சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுக்கிடையில் தற்காலிக கோவிட் கால விமான போக்குவரத்து ஏற்பாடுகள்; உடன்படிக்கையைச் செய்துகொள்ளுமாறு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சருக்கு இன்று (25/11/2021) கடிதம் எழுதியுள்ளார்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

flight service chief minister Tamilnadu singapore foreign travellers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe