Direct flight service between Chennai - Ayodhya

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

Advertisment

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பகத்ர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சென்னையில் இருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று (01.02.2024) முதல் நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அதன்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சென்னை - அயோத்தி, அயோத்தி - சென்னை இடையே நேரடி விமான சேவை தொடங்க உள்ளது. சென்னையில் இருந்து அயோத்திக்கு நண்பகல் 12.45 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 03.15 மணிக்கு அயோத்தியை சென்றடையும்.

அதே விமானம் மறுமார்க்கமாக மாலை 4 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 06.20 மணிக்கு சென்னையை வந்தடையும். இந்த விமானம் போயிங் 737-8 வகை விமானம் என்பதால் ஒரே நேரத்தில் 180க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டணமாக ரூ.6 ஆயிரத்து 499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment