Advertisment

டைனோசர் முட்டைகள் அல்ல...  அருங்காட்சியக காப்பாட்சியார் விளக்கம்! 

Dinosaur eggs are not ... Museum Exhibitors Description

பெரம்பலூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ள முட்டை வடிவிலான உருண்டைகள் டைனோசர் முட்டைகளாக இருக்கக் கூடுமோ என்றகேள்வி எழுந்தநிலையில்அவை டைனோசர் முட்டைகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கடல் பகுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பகுதிகளில் பல்வேறு விவசாயபணிக்காக அவ்வப்போது பூமியைத் தோண்டும் பொழுது வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு போன்ற முட்டை வடிவிலான பாறைகள் கிடைக்கப் பெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் அண்மையில்பெரம்பலூர் குன்னம் பகுதியில் ஏரியை ஆழப்படுத்துவதற்காக தோண்டப்பட்ட பொழுது முட்டை வடிவிலான உருண்டைகள் நூற்றுக்கணக்கில் கண்டறியப்பட்டது. கண்டெடுக்கப்பட்டவை டைனோசரின் முட்டைகளாக இருக்கக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தநிலையில்அரியலூர் அரசு கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் தியாகராஜன்,பெரம்பலூர் மாவட்டத்தில் பல இடங்களில்இதுபோன்ற முட்டை வடிவிலான உருண்டைகள் அவ்வப்போது கிடைப்பது வழக்கம்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற பாறைகள் கிடைக்கப்பெற்றபோது இது சுண்ணாம்புக்கல் என்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அதே வடிவிலான பாறைகள் ஏரியில் கிடைத்துள்ளதால்ஆய்விற்கு பிறகேஇந்த பாறைகள் அதே சுண்ணாம்பு பாறைகளாஅல்லது டைனோசர் முட்டைகளா என்பது தெரியவரும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்துஅருங்காட்சியககாப்பாட்சியார் சிவக்குமார் கூறுகையில், கண்டுபிடிக்கவப்பட்டவை டைனோசர் முட்டைகள் அல்ல, ஆனால் இந்தமுட்டை போன்ற உருண்டைகள் கடல்வாழ் உயிரினங்களின் படிமபாறைகள்.கடல் வாழ் உயிரினங்களின் மீது அம்மோனைட் எனும் பொருள் படித்ததால்ராட்சத உருண்டைகளாகியுள்ளது என விளக்கமளித்துள்ளார்.

egg Perambalur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe