Advertisment

தினேஷ் கார்த்திக் வீட்டின் ஆவணம் தொலைந்ததாகப் போலீசில் புகார்

Dinesh Karthik house documents were reported to the police as lost

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் வீட்டின் ஆவணம் தொலைந்து விட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertisment

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தனது வீட்டின் ஆவணம் தொலைந்து விட்டதாகத்தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். நீலாங்கரையில் இருந்து வீட்டின் அசல் ஆவணங்களை நகலெடுக்க எடுத்துச் சென்றபோது ஆவணங்கள் தொலைந்ததாக புகார் அளித்துள்ளார். இதையடுத்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

Advertisment

முன்னதாகப் பிரபல நடிகர் ராம்கி கடந்த 5 ஆம் தேதி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வீட்டில் வைத்திருந்த வீட்டின் அசல் சொத்து ஆவணங்களைக் காணவில்லை என்றும், காணாமல் போன ஆவணங்களைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றும் நடிகர் ராம்கி போலீசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

DOCUMENT Chennai police cricketer
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe