Advertisment

பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்தில் ஓட்டு போட்ருங்க... சின்னத்தை மாற்றிய திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு அதிமுக கூட்டணிக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த ஜோதி முத்துவை வேட்பாளராக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது பாமக.

Advertisment

அதனடிப்படையில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து டாக்டர்.ராமதாஸ் திண்டுக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Advertisment

இக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ,

dindugul seenivasan election campaign in dindugul

திண்டுக்கல் மாநகரில் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்குஅடுத்தபடியாக 46 வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு கூட்டம் டாக்டர்.ராம்தாஸ் அய்யாவுக்கு தான் வந்திருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு இதே இடத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் யார்? என்றும் அவர் மாறி மாறி பேசுவார், தவறாக பேசுவார் என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஆனால்அப்படி நான் என்ன தவறாக பேசினேன் பிரதமர் மோடிக்கு ராகுல் பேரன் போல் இருக்கிறார் என்றுதான் சொன்னேனே தவிர மோடியின் பேரன் ராகுல் என்று சொல்லவில்லை.

அப்படி மீடியாக்கள் என்னுடைய பேச்சை எடிட்டிங் செய்து போட்டிருக்கிறார்கள் அதுதான் உண்மை. அது போல் அம்மா மருத்துவமனையில் இருந்தபோது மாறி மாறி பேசினோம் என்று சொல்லி இருக்கிறார்கள் அது உண்மைதான் அதற்காக நானே வருத்தம் தெரிவித்திருக்கிறேன். அது நாங்களாக சொல்லவில்லை சசிகலா சொன்னதே நாங்கள் சொன்னோம் பேசிக்கொண்டிருந்த சீனிவாசன் பாமக வேட்பாளருக்கு ஆப்பிள் சின்னத்திலே வாக்களித்து வெற்றிபெற வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.உடனே கீழிருந்த தொண்டர்கள் அது மாம்பழம் சின்னம் எனக்கூற சுதாரித்து கொண்ட அமைச்சர் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Comedy Dindigul Sreenivaasan Election pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe