திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே சாலைப்புதூர் என்ற இடத்தில் திருப்பூரில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/bus in_3.jpg)
இந்த சாலைவிபத்தில் பஸ் டிரைவர் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தார். பஸ்சில் பயணம் செய்த பயணிகளும் இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் அனைவரையும் வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினர் மீட்டு வத்தலக்குண்டு மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us