Skip to main content

பணிக்கு வர மறுக்கும் தலைமை ஆசிரியர்...  நடவடிக்கை எடுப்பாரா கலெக்டர்?

Published on 04/02/2020 | Edited on 04/02/2020


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணக்கரையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் "உண்டுஉறைவிட பள்ளி" செயல்படுகிறது. இந்த பள்ளியில் சொக்கன் அலை ஊரடி-ஊத்துக்காடு, கரும்பாறை, பட்டூர், சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மலைகிராமங்களில் வாழும் பழங்குடி மக்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். இது துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தொகுதியான போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியாக இது திகழ்கிறது. இங்கு தலைமை ஆசிரியர் மற்றும் காப்பாளராக ராகவன் உள்ளார். அத்துடன் இடைநிலை ஆசிரியை, சமையலர், காவலாளி ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

 

collector


சில ஆண்டுகளுக்கு முன்பு 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்த இந்த உண்டுஉறைவிட பள்ளியில் கடந்த மாதம் 12 பேர் படித்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. இங்கு 5-ம் வகுப்பு வரை படிப்பை நிறைவு செய்வதே பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு பெரும்சுமையாக மாறி விட்டது.

மகிழ்ச்சியான கல்வியும், ஆரோக்கியமான உணவும் கொடுத்தாலோ இங்குள்ள குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்துவது தடுக்கப்படும். ஆனால் அவை இரண்டும் இங்கே கிடைப்பது இல்லை. அரசு வழங்கியுள்ள உணவு பட்டியல் இங்கு பின்பற்றப்படுவது கிடையாது. பெரும்பாலான நாட்களில் காலை நேர உணவாக வெறும்சோறும், தேங்காய் சட்னியும் வழங்கப்படுகிறது. இரவுக்கு தனியாக உணவு சமைப்பது கிடையாது. மதியம் சமைக்கும் உணவே இரவு வழங்கப்படுகிறது.

இங்கு மின்விளக்கு வசதி கிடையாது. சோலார் மின்விளக்கு இருந்தாலும் அவை முழு இரவு நேரத்தையும் வெளிச்சமாக்குவது இல்லை. இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்புக்கான பாடங்களை தலைமை ஆசிரியர் நடத்த வேண்டும். ஆனால் தலைமை ஆசிரியர் ராகவன் சரிவர பணிக்கு வருவது இல்லை. மாணவர்களுக்கு எந்த மாதிரியான உணவு வழங்கப்படுகிறது என்பதையும் கண்காணிப்பது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.

தலைமை ஆசிரியர் மீது எழுந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அவருக்கு டிசம்பர் மாதம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, 17பி விளக்க நோட்டீஸ் வழங்கினார். ஆனால் அதன் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல், பிரச்சினை ஆறப்போட்டு, தலைமை ஆசிரியரை காப்பாற்றும் செயலில் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

collector

 

விளக்க நோட்டீஸ் பெற்றபோதிலும், தலைமை ஆசிரியர் ராகவன் மீண்டும் தனது பழைய நடைமுறையை தான் கடை பிடித்து வருகிறார். வாரத்தில் ஒருமுறை அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை வந்து, வருகைப்பதிவேட்டில் மொத்தமாக கையெழுத்து போடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பிலும், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதையும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று புகைகின்றனர் நக்சல் தடுப்பு பிரிவினர்.

பழங்குடியின குழந்தைகள் நலனில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தனிக்கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், கலெக்டரும் இந்த பிரச்சனையை கண்டும், காணாமல் இருப்பது பழங்குடியின குழந்தைகளுக்கு இருக்கும் ஒற்றை நம்பிக்கையும் கைவிட்டு போகும் நிலையில் உள்ளது. அதனால் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அந்த தலைமையாசிரியர்  ராகவன் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பாரா? என பொதுமக்களும், பெற்றோர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.