Dindigul youngster birthday celebration

Advertisment

திண்டுக்கல் அருகே பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர் உள்பட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாநகரில் உள்ள முத்தழகு பட்டியைச் சேர்ந்தவர் ரூபன். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன இந்த நிலையில் இவர் தனது பிறந்தநாளை திண்டுக்கல் பழனிசாலையில் இருக்கும் மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் கொண்டாடினார்.

Advertisment

அப்போது தனது மோட்டார் சைக்கிள் மீது கேக் வைத்து மிக நீளமான பட்டா கத்தியுடன் அதை வெட்டும்போது அவரை நண்பர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் சினிமா படத்தில் வரும் சில வசன காட்சிகள் அதில் இடம் பெற்றிருந்தன. இதனை அங்கிருந்த நண்பர்கள் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த விஷயம் மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா, காதுக்கு எட்டியதின்பேரில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாரருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.

அதன்பேரில் வீடியோ வெளியிட்ட ரூபன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் மீது தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.