Dindigul young passes away police investigation

திண்டுக்கல் மாநகரில் உள்ள மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ். இவர், அதே பகுதியில் உள்ள செட்டிகுளத்தில் மீன்பிடி குத்தகை எடுத்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அவர், குளக்கரையில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல், ராகேஷுடன் தகராறு செய்துள்ளது. அப்போது அந்தக் கும்பலில் இருந்த நபர் ஒருவர், திடீரென தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ராகேஷினைச் சரமாரியாக சுட்டதில் வலது மார்பில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த ராகேஷினை உடன் இருந்த நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக்கொண்டு சென்றனர்.

Advertisment

Dindigul young passes away police investigation

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும், அவரைப் பரிசோதனை செய்ததில், அவரது வலது விலா எலும்பு, வயிற்றுப்பகுதி என ஆறு இடங்களில் குண்டுகள் துளைத்திருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி மற்றும் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாசன் ஆகியோர் நேரில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மோப்ப நாய் ரூபி மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் செட்டிகுளத்தில் மீன் குத்தகை எடுப்பதில் முன்விரோதம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.