திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேலுச்சாமியும், நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சௌந்தரபாண்டியனும் போட்டியிட்டனர். அதன் அடிப்படையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்றம் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது.

d

Advertisment

இந்த நிலையில் தான் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் வேலுச்சாமி மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதியின் வேட்பாளர் சௌந்தரபாண்டியன்

ஆகியோரை கழகதுணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி,கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமாருடன் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மாலை சால்வை அணிவித்து ஆசி பெற்றனர்.

Advertisment

உடன் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் ப.வெள்ளைச்சாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க.பாண்டியராஜன் உள்பட சில பொறுப்பில் உள்ள உ.பி.களும் கலந்து கொண்டனர்.