Advertisment

பிரத்யங்கரா தேவிக்கு நிகும்பலையாக பூஜை- திமுக ஐ.பெரியசாமிக்கு உற்சாக வரவேற்பு! 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் இருக்கும் ஸ்ரீஉண்ணாமுலை சமேத அண்ணாமலையார் திருக்கோவிலில் பிரத்யங்கிரா தேவிக்கு ஒவ்வொரு மாதமும் நிகுலம்பலையாக பூஜை நடைபெறுவது வழக்கம். ஸ்ரீபிரத்யங்கிரா தேவி கோவில் முன்பு உள்ள யாக குண்டத்தில் விறகுகள் போடப்பட்டு நெய் ஊற்றிஎரிக்கப்பட்டது.

Advertisment

பின்பு, வேத விற்பனர்கள் மந்திரம் ஓத, ஹோம பொருட்கள் மாதுளை, கொய்யா, மாம்பழம், பலாப்பழம், திராட்சை, தேங்காய், வெள்ளைப்பூசணி, வெற்றிலை, வெண்கடுகு மற்றும்பலவித பூக்கள் யாகத்தில் போடப்பட்டு மந்திரங்கள் ஓதப்பட்டன. பின்பு, ஹோமத்தில் கலந்து கொள்ளும்

பக்தர்களின் கண் திருஷ்டிகளை போக்குவதற்காக மூட்டை, மூட்டையாக மிளகாய்வற்றலும், விரலிமஞ்சளும்(குச்சி மஞ்சள்) யாகத்தில் கொட்டப்பட்டது.

DINDIGUL TEMPLE VISIT DMK I PERIYASAMY

Advertisment

பின்னர், பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேக, ஆராதானைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் கமிட்டி சார்பாக விழாவிற்கு வந்த திமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமிக்கு பரிவட்டம் கட்டி சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகும்பலை யாகத்திற்கான பூஜைகளை பிரபல சிவாச்சாரியாரும், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவில் தலைமை குருக்களுமான ஜவஹர் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

DINDIGUL TEMPLE VISIT DMK I PERIYASAMY

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஉண்ணாமுலை சமேத அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாக கமிட்டியைச் சேர்ந்த தலைவர் திரைப்பட நடிகர் நம்பிராஜன், செயலாளர் கணேசன்(பாலாஜி ஸ்டீல்), பொருளாளர் நாகராஜ் மற்றும் உதவித்தலைவர் எஸ்.சமயநாதன், கமிட்டி உறுப்பினர்கள்பசும்பொன், எஸ்.கோபாலகிருஷ்ணன் (அக்ரி), டிவிஎஸ் மணி, சிவகாமிநாதன் (லாலா ஸ்வீட்), உட்பட நிர்வாக கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். நிகும்பலையாக பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்அனைவருக்கும் கோவில் கமிட்டி சார்பாக சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

DMK I PERIYASAMY TEMPLE VISIT Dindigul district
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe