Advertisment

இந்தோனேசியா புறப்பட்டார் திண்டுக்கல் சீனிவாசன்!

அரசு முறை பயணமாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றார். சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்ள இருக்கிறார் அவர், அந்த நாடுகளில் உள்ள சரணாலயங்கள், வன உயிரின பூங்காக்கள் ஆகியவற்றையும் அவர் பார்வையிடுகிறார்.

Advertisment

Dindigul Srinivasan goes to Indonesia

அந்த நாடுகளில் வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ ஏற்பட்டால் அதை அணைப்பதற்குஎடுக்கப்படும் முயற்சிகள் போன்றவை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தினால் சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவின்தரத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கான மேம்பாட்டுப் பணிகளை அறிந்துகொள்ள உதவும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றுள்ள நிலையில், தற்போது தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷிய புறப்பட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

dindugal seenivasan Indonesia Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe