Advertisment

’மாம்பழ சின்னத்திற்கு வாக்களித்தால் மத்தியில் நிலையான ஆட்சி அமையும்’- அமைச்சர் சீனிவாசன் பேச்சு!

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணி சார்பாக போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

Advertisment

m

இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, திண்டுக்கல் அனுமந்த நகர், மாலைப்பட்டி பகுதிகளில் வீதி, வீதியாக சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அமைச்சர் சீனிவாசன் பேசும்போது... திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக எண்ணற்ற நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்றால் அமோக வெற்றி பெறலாம் என்றார்.

Advertisment

நீங்கள் மாம்பழ சின்னத்திற்கு வாக்களித்தால் மத்தியில் நிலையான ஆட்சி வரும். பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா முழுவதும் மக்களாட்சி அமையும் என்றார்.

m

தேர்தல் பிரச்சாரத்தின் போது மாவட்ட கழக செயலாளர் வி.மருதராஜ், திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, பா.ஜ.க. நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் கனகராஜ், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் பரசுராமன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் கோபால், பா.ம.க. திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பொங்கலூர் மணிகண்டன், தே.மு.தி.க. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், த.மா.க. கிழக்கு மாவட்டத் தலைவர் ராமதாஸ், த.மா.க. மேற்கு மாவட்ட தலைவர் ராசியப்பன், மூவேந்தர் முன்னேற்ற கழக மாவட்டத்தலைவர் தேவாரம் முருகேசன், முன்னாள் அபிராமி கூட்டுறவு சங்கத்தலைவர் வெ.பாரதிமுருகன், திண்டுக்கல் நகர அ.தி.மு.க. நிர்வாகிகள் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் இக்பால், வெங்கடேசன், திண்டுக்கல் மாநகர கூட்டுறவு வங்கித்தலைவர் பிரேம்மருதராஜ், இராஜசேகரன், லெனின் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

admk Dindigul Srinivasan pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe