Dindigul Srinivasan Action for my support!

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமைக் குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவு எடப்பாடிபழனிசாமிக்குத்தான் என்று கூறியுள்ளார்.

Advertisment

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நேற்று (15/06/2022) சந்தித்துப் பேசினர். அப்போது, அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமை மற்றும் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள்உள்ளிட்டவைகுறித்து ஆலோசனை நடத்தினர்.

Advertisment

இச்சந்திப்புக்குப்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "வெயிட்அண்ட்சீ. எனது ஆதரவு எடப்பாடிபழனிசாமிக்குத்தான்" என்று தெரிவித்தார்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி இன்று (16/06/2022) காலை தனது சொந்த மாவட்டமானசேலத்திற்குச்சென்றுள்ளார். அங்கு அவர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசிக்கஉள்ளதாகத்தகவல் கூறுகின்றன.

Advertisment