Advertisment

அதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன்கூட  பதவிக்கு வரமுடியும்!  அமைச்சர் சீனிவாசன்  பகீர் பேச்சு!!

அதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கூட பதவிக்கு வரும் நிலை உள்ளது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.

Advertisment

d

திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்ட செயலாளர் மருதராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதுபோல் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மைத்துனரான கண்ணனும் மத்திய கூட்டுறவு வங்கியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இந்த இருவரும் இன்று மத்திய கூட்டுறவு வங்கியில் பதவி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கிவாழ்த்துகள் கூறினார்.அதன்பின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது...... தற்போது பதவி ஏற்றுள்ள தலைவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. கடந்த பல ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டத்தில் கட்சிப்பணி மற்றும் மக்கள் பணியாற்றி உள்ளனர். பதவி என்பது யாருக்கும் நிரந்தரமில்லை.

Advertisment

d

அதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டன் கூட உயர்ந்த நிலைக்கு வரும் நிலை உள்ளது. அதன்படி கடுமையாக உழைத்தால் பதவி உங்களை தேடிவரும் எதிர்க்கட்சியினர் தற்போது அதிமுக மேற்கொண்டு வரும் குடிமராமத்து பணிகளை குறைகூறி வருகின்றனர். ஆனால் இது மிகவும் அருமையான தமிழகத்தின் முன்னோடியான திட்டமாகும் வறட்சியின் பிடியில் உள்ள மக்கள் குடிமராமத்து திட்டத்தினால் நீர் நிலங்களில் தண்ணீர் தேக்கி பயனடைந்து வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கின்றனர் என்று கூறினார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி, செட்டிநாயக்கன்பட்டி கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ராஜமோகன், திண்டுக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பிரேம், அபிராமி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் பாரதி முருகன், முன்னாள் கவுன்சிலர் சோனா சுருளி, முன்னாள் எம்பி உதயகுமார், ஒட்டன்சத்திரம் பாலசுப்ரமணி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், நத்தம் ஜாஜகான், சாணார்பட்டி ராமராஜ், கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய பேரவை செயலாளர் சிவாஜி, ஆவின் தலைவர் செல்லச்சாமி, திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் உமாமகேஸ்வரி. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குமார் உள்பட கடசி பொறுப்பாளர்களும் அதிகாரிகளும் பலர் கலந்து கொண்டனர்.

Dindigul Srinivasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe