Advertisment

ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை; போலீசார் தீவிர விசாரணை!

Dindigul school teachers Sawarimuthu - Stella Selvarani house incident

Advertisment

திண்டுக்கல்லில் உள்ள பழனி சாலையில் இருக்கும் கே.டி. மருத்துவமனை எதிர்புறம் நைனார் முகமது தெரு பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து - ஸ்டெல்லா செல்வராணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். சவரிமுத்து ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்டெல்லா செல்வராணி ஜம்புளியம்பட்டி அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகளின் திருமணத்திற்காக துணி எடுப்பதற்காக நேற்று காலை திருச்சிக்குச் சென்று விட்டு இரவு சுமார் 11 மணியளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அதன் பின்னர் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 2 லட்சம் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் விசாரணையைத் துரிதப்படுத்தினார். ஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 100 பவன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தி இருக்கிறது. அதைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Investigation police incident dindigul
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe