Skip to main content

குற்றவாளிக்குச் சாதகம்; பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022

 

Dindigul Police Inspector Suspended

 

கொலை வழக்கில் குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்டதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடம் நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ஓமந்தூரான். இவர் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்,இவரது மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஓமந்தூரான் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அப்போது அவரது மகன் தனது தந்தையை கொலை செய்ததாக போலீசில் சரணடைந்தார். இது தொடர்பாக சத்திரப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா தலைமையிலான போலீசில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய் தந்தையை துன்புறுத்தியதால் ஓமந்தூரானை அவரது மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் சிறுவனை போலீசார் கைது செய்தனர். இதற்கு இடையே ஓமந்தூரான் கொலை வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும், குற்றவாளிக்கு சாதகமாக இன்ஸ்பெக்டர் செயல்பட்டதாகவும் ஓமந்தூரான் தந்தை ரங்கசாமி திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, திண்டுக்கல் சரக மற்றும் தென் மண் டல டி.ஐ.ஜி.யிடம் புகார் செய்தார். அதை தொடர்ந்து கொலை வழக்கின் விசாரணை அதிகாரியாக பழனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மாற்றப்பட்டார்.

 

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தீவிர விசாரணை நடத்தினார் அதில் ஓமந்தூரானை அவரது மனைவி பாண்டீஸ்வரி உறவினர்களான தாரிசபட்டியை சேர்ந்த கிருஷ்ணவேணி, மதுரை சேர்ந்த ராமையா, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்தும் அதன்பின் ஓமந்தூரானின் மகனை போலீசில் சரணடைய செய்ததும் தெரியவந்தது. அதன்பிறகு பாண்டீஸ்வரி உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.கொலை வழக்கு விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர் கவிதா அனுப்பினார். 

 

அதைத்தொடர்ந்து தென்மண்டல ஐஜி அஸ்ராகார்க், கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதாக இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபாவை பணியிடம் நீக்கம் செய்ய திண்டுக்கல் சரக டிஐஜி, டி.ஐ.ஜி ரூபேஷ்குமார் மீனாக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபாவை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது