Advertisment

ஐ.பெரியசாமி உடன் தேர்தல் களத்தில் குதித்த  திமுக வேட்பாளர் வேலுச்சாமி!

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜவ்வாது பட்டியை சேர்ந்த வேலுச்சாமியை திமுக வேட்பாளராக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கழக பொதுச் செயலாளர் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோருடன் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வேலுச்சாமி ஆசி பெற்றார்.

Advertisment

e

அதன்பின் திண்டுக்கல் வந்த திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் வேலுச்சாமியையும் நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சௌந்தரபாண்டியன் மூர்த்திகள் பெருந்திரளாக திரண்டு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து திண்டுக்கல்லுக்கு வந்த வேட்பாளர்கள் பெரியார், அண்ணா சிலைக்கு ஐ.பி. சக்கரபாணி. ஐ.பி.செந்தில்குமாருடன் சென்று மாலை அணிவித்தனர்.

e

Advertisment

அதன்பின் கழக துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் ஆகியோர் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளரான வேலுச்சாமியை அழைத்துக்கொண்டு நகரிலுள்ள கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்களையும், வர்த்தக சங்க பொறுப்பாளர்களையும், நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கு ஆதரவு திரட்டினார்கள். அது போல் சர்ச்சில் உள்ள பாதர்களையும், பேகம்பூரில் உள்ள முஸ்லிம் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வேலுச்சாமிக்கு சமூக ரீதியாக வாக்களிக்கு மாறும் கேட்டுக் கொண்டனர்.

e

இப்படி திமுக வேட்பாளர் வேலுச்சாமி ஐபியுடன் நகரில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார் என்ற தகவல் அந்தந்த அப்பகுதியில் உள்ள கட்சிக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரியவே பெரும் திரளாக திரண்டு நின்று வேலுச்சாமிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இதில் முன்னாள் நகர செயலாளரும் முன்னாள் சேர்மனுமான பசீர் அகமது, நகரச் செயலாளர் ராஜப்பா, ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஏநமெயவ மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, அம்பாத்துரை ரவி, ஜெகன்.அக்பர்.முருகானந்தம் உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

dindigul periyasamy senthilkumar velusamy
இதையும் படியுங்கள்
Subscribe