திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நகர கழகத்தின் சார்பாக கலைஞரின் 96 வது பிறந்த நாள் விழா கொண்டாப்பட்டது. இந்த பிறந்த நாள் விழாவுக்கு ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளச்சாமி தலைமை தாங்கினார்.

Advertisment

v

அதை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மறைந்த கலைஞரின் திருவுருவ படத்திற்கு நகர செயலாளர் வெள்ளச்சாமி, மேற்கு மாவட்ட அவைத் தலைவர் மோகன், ஒட்டன்சத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிஸ்வரன், தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

v

Advertisment

அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும், நகர வார்டுகளில் கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்கள்.

v

இந்நிகழ்வில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் உள்பட நகர் கழக நிர்வாகிகளும், வார்டு கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளுடன் உடன்பிறப்புக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு கலைஞர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார்கள்.

Advertisment

vv