dindigul oddanchatram nursing student incident 

Advertisment

திண்டுக்கல்லில் கல்லூரி மாணவிஒருவர் கல்லூரியின்மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா பழையபட்டி பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன், பழனியம்மாள் தம்பதியரின் மகள்கார்த்திகா ஜோதி என்பவர்ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில்,விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி கீழே விழுந்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி நிர்வாகம் மூலம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுதீவிர சிகிச்சையில்இருந்து வருகிறார்.

Advertisment

ஒட்டன்சத்திரம் குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதியரசர் செல்வ மகேஸ்வரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், கல்லூரி மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாடியில் இருந்து கல்லூரி மாணவி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.