திண்டுக்கல்லில் உள்ள மொத்தம் 14 ஒன்றியங்களில் முதல் கட்டமாக 7 ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 13 மாவட்ட கவுன்சிலர், 144 ஊராட்சி தலைவர், 125 ஒன்றிய கவுன்சிலர் மற்றும் 1401 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்காக 93 வாக்குச்சாவடி மண்டலங்களில் 617 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

Dindigul-Local body election-Polling slowdown

அவற்றில் 1160 வாக்குச் சாவடிகளும், 4840 ஓட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரத்து 27 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். அவர்களில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 642 ஆண் வாக்காளர்களும், 3 லட்சத்து 49 ஆயிரத்து 317 பெண் வாக்காளர்களும் 68 மூன்றாம் பாலினத்தவர் அடங்குவர். மொத்தமுள்ள 1160 வாக்குச்சாவடிகளில் 25 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்றும் மூன்று வாக்குச்சாவடிகள் அணுக முடியாதவை என்றும் கண்டறியப்பட்டுள்ளதது.

நடைபெற்றுவரும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மையங்களில் திண்டுக்கல் மாவட்ட சிறப்புதேர்தல் அதிகாரி டாக்டர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். வாக்கு மையங்களில் ஆய்வு செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர் காவல்துறை பாதுகாப்புடன் ஆண், பெண், புதிய வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தது வருகின்றனர். ஒவ்வொரு வாக்காளர்களும் வார்டு உறுப்பினர் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என நான்கு ஓட்டுகள் போடுவதால் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கிறது.

Advertisment

Dindigul-Local body election-Polling slowdown

காலை 10.00 மணி நிலவரப்படி 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. அப்படி இருந்தும் வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் பஞ்சம்பட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 10 வேட்பாளர்கள் போட்டி போடுகிறார்கள். இதில் மம்புட்டி சின்னத்தில் பரமன் போட்டி போடுகிறார்.

ஓட்டுச்சீட்டில் 5வது இடத்தில் இருக்கிறது அந்த மம்புட்டி சின்னம். ஆனால் சின்னம் சரிவர வாக்காளர்களுக்கு தெரியவில்லை என வேட்பாளர் பரமனிடம் பலர்

புகார் கூறியுள்ளனர். இதையடுத்து, சின்னம் சரியாக தெரியாததை பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் வேட்பாளர் பரமன் புகார் கூறி இருக்கிறார். இதனால் பள்ளபட்டி பஞ்சாயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.