Advertisment

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து... 5 பேர் பலி... சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு...!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடை ரோடு அருகே கார் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

dindigul car accident

திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் சடையாண்டி புறம் பிரிவு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் மாவுத்தன் பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற முதியவர் சைக்கிளில் நின்று கொண்டிருக்கிறார். அப்போது திருநெல்வேலியி லிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த பிரகதீஸ் என்ற மருத்துவ கல்லூரி மாணவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாக நின்று கொண்டிருந்த முதியவர் கிருஷ்ணன் மீது மோதிவிட்டு அதேவேகத்தில் பக்கவாட்டில் வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் சிக்காமல் பாதையை கடந்து எதிரே ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருநெல்வேலி சென்ற மற்றொரு கார் மீது அதி வேகமாக மோதி நொறுங்கியது.

கார் மோதலில் இடிபாடுகளுக்குள் சிக்கி அந்த காரில் வந்த வெள்ளையன், செல்வம், மைந்தன், ஜெபக்கனி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பிரகதீஷ் ஓட்டி வந்த காரில் இருந்த அவரது பாட்டி பெரியம்மாள் சம்பவ இடத்தில் பலியானார். சைக்கிள் மீது கார் மோதியதில் காயமடைந்த கிருஷ்ணன் மருத்துவமனையில் பலியானார். பிரகதீஷ் மற்றும் மேலும் 2 பேர் படுகாயத்துடன் திண்டுக்கல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
CCTV footage car dindigul
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe