
திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான 'சுரபி' நர்சிங் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி கடந்த மாதம் 19ஆம் தேதி கல்லூரி மாணவர்கள் திண்டுக்கல்- பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து 3 மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் 2 போக்சோ சட்டத்தின் கீழ் மற்றும் 14 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த கல்லூரியின் விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவான ஜோதிமுருகன் திருவண்ணாமலை போளூர் நீதிமன்றத்தில் சரண்டர் ஆனார். இதையடுத்து கடந்த வாரம் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி புருஷோத்தமர் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென ஜோதிமுருகன் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சரண்டர் செய்தார். இதனைத் தொடர்ந்து 2 போக்சோ வழக்கிலிருந்து ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். நாள்தோறும் வடமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)