Skip to main content

திண்டுக்கல் பூச்சொரிதல் விழா! பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்!

Published on 21/02/2020 | Edited on 21/02/2020

உலகப் புகழ்பெற்ற திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல் இந்த வருடத் திருவிழா துவங்கியது இந்த கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் விநாயகர், ஐயப்பன், முருகன், அமர்ந்திருக்க தேரின் நடுவில் பிரம்மாண்டமாய் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 

Dindigul flower Function! Thousands of devotees piled on!

 

இந்த பூத்தேர் கோவிலில் இருந்து புறப்பாடு நடைபெற்று கிழக்கு ரத வீதி, மேற்குரத வீதி, பழனி ரோடு, தெற்குரத வீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தது. இப்படி கோட்டை மாரியம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்ததை கண்டு மாநகரில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெருந்திரளாக வந்து அந்தந்தப் பகுதியில் சாலை ஓரங்களில் நின்று கோட்டை மாரியம்மனுக்கு காணிக்கையாக பூக்களை பக்தர்கள் செலுத்தி கோட்டை மாரியம்மனை தரிசித்துச் சென்றனர்.

 

Dindigul flower Function! Thousands of devotees piled on!


கோட்டை மாரியம்மனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அங்கங்கே அன்னதானமும் நீர்மோர், பானக்கம் மற்றும் பொங்கல், புளியோதரை  பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த பூச்சொரிதல் விழாவை சிவசக்தி நாகராஜ் மற்றும் டாக்டர் காஞ்சனா நாகராஜ் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இப்படி கோட்டைமாரியம்மன் நகரில் பூத்தேர் மூலம் உலா வருவதை பொதுமக்கள் நேரடியாகவே வீட்டில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளூர் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது இதனால் வீட்டிலிருந்த பொதுமக்கள் கூட கோட்டை மாரியம்மனை வீட்டில் இருந்தவாரே தரிசித்தனர்.

 

Dindigul flower Function! Thousands of devotees piled on!


அதனை தொடர்ந்து வருகின்ற 25ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று. அதை தொடர்ந்து 15 நாளைக்கு கோட்டை மாரியம்மன் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. அந்தத் திருவிழாவின்போது பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக தீச்சட்டி எடுப்பது பூக்குழி இறங்குவதும் அங்க பிரதஸ்னம்  உள்பட பல வேண்டுதல்களையும் கோட்டை மாரியம்மனுக்கு செலுத்துவார்கள். அதுவும் தினசரி கோட்டைமாரியம்மன் நகரில் மின் அலங்காரத்தால் பவனி வரும் காட்சியை பார்ப்பதற்காக மக்கள் பெருந்திரளாக திரள்வார்கள் இதற்காக திண்டுக்கல் மட்டுமல்ல மாவட்ட அளவிலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி கோட்டை மாரியம்மனை தரிசிக்க திண்டுக்கலுக்கு படையெடுத்து வர இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.