உலகப் புகழ்பெற்ற திண்டுக்கல்கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம் அதுபோல் இந்த வருடத் திருவிழா துவங்கியது இந்த கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு பூக்களால்அலங்கரிக்கப்பட்டு தேரில்விநாயகர், ஐயப்பன், முருகன், அமர்ந்திருக்க தேரின் நடுவில் பிரம்மாண்டமாய் கோட்டை மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Advertisment

Dindigul flower Function! Thousands of devotees piled on!

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த பூத்தேர் கோவிலில் இருந்து புறப்பாடு நடைபெற்று கிழக்கு ரத வீதி, மேற்குரத வீதி, பழனி ரோடு, தெற்குரத வீதி என நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தது. இப்படி கோட்டை மாரியம்மன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்ததை கண்டு மாநகரில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெருந்திரளாக வந்து அந்தந்தப் பகுதியில் சாலை ஓரங்களில் நின்று கோட்டை மாரியம்மனுக்கு காணிக்கையாக பூக்களை பக்தர்கள் செலுத்தி கோட்டை மாரியம்மனை தரிசித்துச் சென்றனர்.

Dindigul flower Function! Thousands of devotees piled on!

கோட்டை மாரியம்மனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு அங்கங்கே அன்னதானமும் நீர்மோர்,பானக்கம் மற்றும் பொங்கல், புளியோதரை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த பூச்சொரிதல் விழாவை சிவசக்தி நாகராஜ் மற்றும் டாக்டர் காஞ்சனா நாகராஜ் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இப்படி கோட்டைமாரியம்மன் நகரில் பூத்தேர் மூலம் உலா வருவதை பொதுமக்கள் நேரடியாகவே வீட்டில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு உள்ளூர் தொலைக்காட்சிகளில்நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது இதனால் வீட்டிலிருந்த பொதுமக்கள் கூட கோட்டை மாரியம்மனை வீட்டில் இருந்தவாரே தரிசித்தனர்.

Advertisment

Dindigul flower Function! Thousands of devotees piled on!

அதனை தொடர்ந்து வருகின்ற 25ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று. அதை தொடர்ந்து 15 நாளைக்கு கோட்டை மாரியம்மன் திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது.அந்தத் திருவிழாவின்போது பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக தீச்சட்டி எடுப்பது பூக்குழி இறங்குவதும் அங்க பிரதஸ்னம்உள்பட பல வேண்டுதல்களையும் கோட்டை மாரியம்மனுக்கு செலுத்துவார்கள்.அதுவும் தினசரி கோட்டைமாரியம்மன் நகரில் மின் அலங்காரத்தால் பவனி வரும் காட்சியை பார்ப்பதற்காக மக்கள் பெருந்திரளாக திரள்வார்கள் இதற்காக திண்டுக்கல் மட்டுமல்ல மாவட்ட அளவிலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி கோட்டை மாரியம்மனை தரிசிக்க திண்டுக்கலுக்கு படையெடுத்து வர இருக்கிறார்கள்.