Advertisment

பொதுமக்களிடம் அடாவடியாக பேசும் திண்டுக்கல் பெண் சப்-இன்ஸ்பெக்டர்!

 Dindigul female sub-inspector talking nonsense to the public!

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா நேரத்தில் ஊரடங்கு வெளியே வரும் பொதுமக்களிடம் மரியாதையாகவும், அன்பாகவும் பேச வேண்டும் என்று போலீசாருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு இருக்கிறார்.

Advertisment

அதன்படி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கில் அங்கங்கே வெளியே வரும் பொதுமக்களிடம் பாதுகாப்பு பணியில் இருக்கும் பெரும்பாலான போலீசாரும் அன்போடும்,மரியாதையோடும் தான் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.திண் டுக்கல் மாவட்டத்திலுள்ள போலீஸ் உயர் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்பணிகளை அவ்வப்போது எஸ்.பி.ரவளி பிரியாவும், டி.ஐ.ஜி முத்துசாமியும் இரவு பகல் பராமல் ஆய்வு செய்தும் வருகிறார்கள்.

Advertisment

அதோடு அவர்களுக்கு உணவு, டீ காபியும் கொடுத்து உற்சாகப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். இந்த நிலையில்தான் திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸ் ரோட்டில் உள்ள அஞ்சலி ரவுண்டானாவில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார்கள்.அப்பொழுது அவ்வழியாக டூவீலரில் வந்தவர்களை மடக்கி அனிதா விசாரித்து வருகிறார்.

 Dindigul female sub-inspector talking nonsense to the public!

அப்பொழுது டூவீலரில் வந்த முருகன் என்ற நபர் எனது நண்பருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.அதனால் பேங்கில் போய் பணம் எடுக்கப் போகிறோம்.அதற்காகத்தான் அவருடைய துணைவியார் என்னுடன் அனுப்பி வைத்திருக்கிறார். இருவரும் பேங்குக்கு போய் பணம் எடுக்க போகிறோம் என்று கூறியிருக்கிறார். அதை கேட்ட எஸ்.ஐ. அனிதா, இவ்வளவு டிப்டாப்பாக சுடிதார் போட்டு இருக்கிற அவருக்குடூவீலர் ஓட்ட தெரியதா? என்று மரியாதை இல்லாமல் பேசியதுடன் வாய்க்கு வந்தபடி மரியாதை குறைவாக பேசியிருக்கிறார். அதைக்கேட்டு டூவீலரில் வந்த முருகனும் உடன் வந்த நண்பரின் துணைவியாரும் மனம்நொந்து போய்விட்டனர். அதுபோலவே அப்பகுதிகளில் டூவீலர்கள் வரக்கூடிய பொதுமக்களை பாஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேண்டுமென்றே மடக்கி அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டி அடாவடி செயலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

 Dindigul female sub-inspector talking nonsense to the public!

இதுகுறித்து உடனே டி.ஐ.ஜி.முத்துசாமியைதொடர்பு கொண்டு எஸ்.ஐ.அனிதாவின் செயல்பாடுகளைப் பற்றி எடுத்துக் கூறி உடனே எஸ்.பி.யிடம் பேசி உடனே நடவடிக்கை எடுப்பதாக டி.ஐ.ஜி.முத்துசாமி உறுதி கூறினார்.

corona Dindigul district lockdown police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe