/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dd-rathnam.jpg)
திண்டுக்கல்லில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஜிடிஎன் சாலையில் உள்ள தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் இரண்டாவது முறையாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மணல் குவாரிகளை தொழிலதிபர் ரத்தினம் நடத்தி வரும் நிலையில் அதில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார் காரணமாக அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி கடந்த செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில்அமலாக்கத்துறையினர் தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான இடங்களிலும், அவரதுமைத்துனர் கோவிந்தனுக்கு சொந்தமான இடங்களிலும்அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)