Advertisment

திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும்  எம்.எல்.ஏ.மனைவி!

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேலுச்சாமி களமிறக்கப்பட்டுள்ளார். இந்த வேலுச்சாமிக்கு ஆதரவாக கழகத் துணை பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐபி செந்தில்குமார், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் ஆகியோர் அந்தந்த பகுதிகளில் வேலுச்சாமியை அழைத்துக்கொண்டு நகரம் முதல் பட்டி தொட்டிகள் வரை வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதோடு அந்தந்த பகுதியில் உள்ள மாவட்டம், நகரம், ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையிலும் வேலுச்சாமி வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்டு வருகிறார்.

Advertisment

i

இந்த நிலையில்தான் பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில் குமாரின் மனைவியான மெர்சி செந்தில் குமார் தனது கணவர் தொகுதியான பழனி நகர் பகுதியில்வாக்காள மக்களை சந்தித்து பிட் நோட்டிஸ்களை கொடுத்து திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதோடு பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடமும், கடைவீதி, அடிவாரம் பகுதிகளில் கடை வைத்திருப்பவர்களிடம் பிட் நோட்டீசுகளை கொடுத்து தனிமையில் வாக்கு சேகரித்து வருகிறார்.

Advertisment

i

அப்போது வாக்காள மக்களிடம் மெர்சி செந்தில் குமார் பேசும் போது....இந்த மத்திய மாநில அரசுகள் மக்களை புறக்கணித்து வருகிறது. அப்படிபட்ட இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் . அதன் மூலம் மத்தியில் ராகுல் ஆட்சியும் மாநிலத்தில் தலைவர் தளபதி ஆட்சியும் மலரும். அதன் மூலம் உங்களுடைய கோரிக்கைகளையும் குறைகளையும் தீர்த்து வைப்பார்கள். தற்பொழுது நீட் தேர்வு மூலம் மாணவ, மாணவிகள் எல்லாம் மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. அப்படிப்பட்ட நீட் தேர்வை ராகுல் ரத்து செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.

ip

வருமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு மாதா மாதம் 6000 ரூபாய் வீடு தேடி உங்களுக்கு கொடுக்க இருக்கிறார். அதுபோல் பெண்களுக்கு 33 சதவீத அடிப்படையில் அனைத்து துறைகளிலும் வேலை கொடுக்க முன்வந்திருக்கிறார். அதுபோல் 60 வயதான அனைவருக்கும் முதியோர் உதவி தொகை கிடைக்க சட்டம் கொண்டு வர தலைவர் தளபதி முன்வந்து இருக்கிறார். அதனால் நீங்கள் அண்ணன் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என தேர்தல் களத்தில் தனிமையில் பிரச்சாரம் செய்வதை கண்டு வாக்காளர்களே பூரித்துப் போய் திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கு தான் ஓட்டு போடுவோம் என பகிரங்கமாகவே கூறியும் வருகிறார்கள்.

dindigul i.periyasamy velusamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe