Advertisment

குடிநீர் பிரச்சனையை தீர்க்கக் கோரி ஐ.பி. தலைமையில் திமுக எம்எல்ஏகள்  கலெக்டரிடம் மனு!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் திமுக வசம் உள்ளது. இந்த நிலையில் தான் தற்பொழுது மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியால் மக்கள் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். அதோடு நகரம் முதல் குக்கிராமங்கள் வரை இருக்கக் கூடிய மக்கள் குடி தண்ணீரை கூட ஒரு குடம் பத்து ரூபாய்க்கு வாங்கி குடிக்கும் அவலநிலையில் இருந்து வருகிறார்கள்.

Advertisment

i

அந்த அளவுக்கு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை ஆத்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மக்களுக்கு முழுமையாக கொண்டு செல்லவில்லை. அதனால் தான் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு கூட ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதை கண்டு தொகுதி எம்.எல் ஏ. சக்கரபாணி பொதுமக்களை திரட்டி வந்து கலெக்டர் அலுவலகத்தில் போராட்டமே நடத்தினார். அப்படி இருந்தும் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க மாவட்ட கலெக்டர் வினைய் ஆர்வம் காட்டவில்லை.

Advertisment

இந்த நிலையில் தான் தற்பொழுது மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் கூடிநீர் பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்த்து வைக்க வேண்டும் எனகழக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளருமான சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் மற்றும் நத்தம் சட்டமன்ற உறுப்பினர்ஆண்டி அம்பலம் ஆகியோர் மாவட்ட கலெக்டர் வினையை கலெக்டர் அலுவலகத்திலையே சந்தித்து மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் குடிநீர் பிரச்சனையை போர்க்கால அடிப்படையில் தீர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அதோடு காவேரி கூட்டு குடிநீர் மற்றும் ஆத்தூர் டேம் தண்ணீரையும் முழுமையாக மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதையும் கலெக்டரிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் கேட்டுக்கொண்ட கலெக்டர், மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை ஏற்படாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.பி.யிடம் உறுதி கூறியுள்ளார்.

i.periyasamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe