பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட இளைஞர் உட்பட 4 பேர் கைது!

dindigul district youth incident police arrested

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு காந்தி நகரைச் சேர்ந்தவர் ஹரிஹரன். பொறியியல் பட்டதாரியான இவர், வத்தலக்குண்டு புறவழிச்சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் நண்பர்களுடன் தேனீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஷேக் முகமது, ஹரிஹரனுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

வாய்த்தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் இரண்டு தரப்பைச் சேர்ந்த இளைஞர்களும் கோஷ்டியாக கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சினிமா பாணியில் ஒருவருக்கு ஒருவரை விரட்டி பிடிக்கத் தொடங்கியுள்ளனர். காந்தி நகர் குடியிருப்பு பகுதிக்குள் மீண்டும் பிரச்சனை தொடங்கியுள்ளது. இதில் ஷேக் முகமது என்ற இளைஞர் தனது கையில் பட்டா கத்தியுடன் வந்து ரகளையில் ஈடுபட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வத்தலக்குண்டு காவல்துறையினர் பட்டா கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட ஷேக் முகமது மற்றும் அவரது நண்பர்கள் யோகராஜ், ஜாகிர் உசேன், முஹம்மது பாசித் ஆகியோரை கைது செய்தனர்.

இத்தாக்குதல் சம்பவத்தில் ஹரிஹரன் மற்றும் விக்னேஷ் ஆகியோர் காயமடைந்தனர். பட்டா கத்தியுடன் இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dindigul district police Youth
இதையும் படியுங்கள்
Subscribe