ddfff

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலராக கோபிநாத் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகத்தில் பணி புரிந்து வந்த சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்குபிறந்தநாள் என்பதால் அதிகாரி என்ற முறையில் கோபிநாத்துக்கு ஸ்வீட் கொடுத்திருக்கிறார்.

Advertisment

அப்பொழுது கோபிநாத் திடீரென சுமதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டார். அந்த வீடியோ காட்சி தற்பொழுது வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. இந்த விஷயம் திண்டுக்கல் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன் காதுக்கு எட்டவே, உடனே வேடசந்தூர் பேரூராட்சி அலுவலகம் சென்று சமூக வலைதளத்தில் பரவி வரும் வீடியோ காட்சி குறித்து மற்ற உழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

Advertisment

அதன் அடிப்படையில்தான் வேடசந்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலரான கோபிநாத்தை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ய உதவி இயக்குனர் குருராஜன் அதிரடி உத்தரவிட்டார். இப்படி பெண் ஊழியரிடம் செயல் அலுவலர் சில்மிஷம் செய்தது, மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதோடு அதிரடி நடவடிக்கை எடுத்த உதவி இயக்குனர் குருராஜனையும் பாராட்டி வருகிறார்கள்.