ADVERTISEMENT

வரதமாநதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு!

10:54 PM Nov 02, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

வரதமாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, வரதமாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக 06/11/2020 முதல் 120 நாட்களுக்கு பழனி வட்டம், பாப்பன்கால்வாய், பெரிய வாய்க்கால், பழனி வாய்க்கால் மற்றும் 18 பாசன குளங்களின் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 5,523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்'. இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT