Advertisment

 'டாஃபே' தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்!

DINDIGUL DISTRICT TAFE EMPLOYEES

Advertisment

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள 'டாஃபே' டிராக்டர் தயாரிப்பு தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 600- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு உள்ளேயும், வெளியேயும் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (11/12/2020) மாலை தொடங்கிய போராட்டம் நள்ளிரவு வரை நீடித்து இரண்டாம் நாளாக இன்றும் தொடர்கிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணமுன்வரவில்லை என குற்றம்சாட்டும் தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Dindigul district employees TAFE
இதையும் படியுங்கள்
Subscribe